http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஐக்கிய தேசியக் கட்சியின்  அறிவிக்கப்படாத தேசியப் பட்டியலுக்கான பாராளுமன்ற உறுப்பினர் யார்?

ஐக்கிய தேசியக் கட்சி தமது தேசியப் பட்டியலுக்கான உறுப்பினரை இன்றும் பெயரிடவில்லை.

அதுபோல், எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சி இன்றும் தோல்வியில் முடிந்தது

இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் வெற்றிடமாக இருக்கும் போதே, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.30-க்கு பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஜனாதிபதியினால் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் நாளை பிற்பகல் 3 மணிக்கு வௌியிடப்படவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *