தொடர்ச்சியாக போலி மாணிக்கக்கற்களை விற்பனை செய்த ஒருவர் கைது
பலாங்கொடை பெட்டிகல நவநிவசபுர போம்புவ பகுதியை சேர்ந்த நபரொருவர் தொடர்ச்சியாக போலி மாணிக்கக்கற்களை விற்பனை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிசார் கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடந்த 16 ஆம் திகதி மஸ்கெலியா ராணித்தோட்ட பகுதியில் உள்ள ஒருவருக்கு போலி மாணிக்கக் கற்களை ஒரு இலட்சத்து தொண்ணூற்றெட்டு ஆயிரத்துக்கு விற்றுள்ளதாகவும் அந்த கற்களை வாங்கியவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து சந்தேக நபரை நேற்று 17ம் திகதி மாலை குடா மஸ்கெலியா பகுதியில் வைத்து மஸ்கெலியா பொலிசார் செய்துள்ளனர்.
கைது செய்த வேளையில் மேலும் 2 இலட்சம் ரூபாய்க்கு போலியான மாணிக்க கற்கள் விற்பனை செய்ய முற்பட்ட வேளை இவர் கைது செய்யப்பட்டதாக மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
