http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலஞ்சம் பெற முற்படும் அரசு அதிகாரிகள், இலஞ்சமாக வழங்க முற்பட்டவர்கள் நாட்டில் பரவலாக கைது

கஞ்சா சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க, தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்ட ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,
கண்டி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இடமாற்றம் வழங்குவதற்கும் திகன பகுதியிலுள்ள அரச காணியொன்றின் பகுதியை வழங்குவதற்கும் 26,000 ரூபா இலஞ்சம் இலஞ்சம் பெற முற்பட்ட ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாத்தளை பகுதியில் 50,000 ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *