http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் களஞ்சியம்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, நாரேஹென்பிட்டியவில் உள்ள அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தொடர்பான முழுமையான தகவல் களஞ்சியம் ஒன்றை உருவாக்க உள்ளதாக கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

´சம்பிரதாயபூர்வமான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு பதிலாக நவீன தொழினுட்பத்துடன் கூடிய புத்தாக்க தொழிலாளர்களை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு அனுப்புவதே எமது நோக்கம். இலங்கை தொழிலாளர்களை உள்வாங்காத சில நாடுகளுக்கும் இலங்கையர்களை அனுப்பி வைப்பதும் எமது நோக்கம்´ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *