தொடரும் ரணிலின் தலைமை: ஐக்கிய தேசியக் கட்சியின் கடினமான அடுத்த 6 மாதங்கள்
விட்டுக்கொடுப்பு இல்லாத தலைமைத்துவத்தின் அறுவடையை சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சந்தித்தது.
தலைவர் ரனில் விக்கிரமசிங்க வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பிறகுதான் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவாசம் தெரிவித்ததாக செய்தித்தாள் ஒன்றில் செய்தி பிரசுரமாகியிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சிறிகொத்தவிலுள்ள தலைமையகத்தில் விசேட சந்திப்பில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர் ஆனால் இந்த சந்திப்புக்கு பிறகு ஊடகங்கள்களுக்கு ஒருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது இங்கே குறிப்பிடதக்கது
