ஆக்லாந்தில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்; கொரோனா இரண்டாவது அலை
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், பிரதமர் ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார்.
ஆக்லாந்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 29 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் ஆக்லாந்து முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது மக்கள் அங்கே அத்தியாவசிய பொருட்களை மற்றும் மருத்துவ சேவை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு பிரதமர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தற்போது வைரஸ்பரவல் மூலம் எது என்பது தெளிவாக தெரியவில்லை இருந்த போதும் ஆக்லாந்து மையப் புள்ளியாக உள்ளதால் உடனடி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது என்றார்

