http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நியூசிலாந்தில் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தல்

2014 முதல் நியூசிலாந்தில் வசித்து வரும் இலங்கை நாட்டைச் சேர்ந்த டி சில்வா கிறிஸ்ட்சர்ச் பெண்ணை தூங்கும்போது பாலியல் வன்கொடுமை செய்ததால் தண்டனைக்கு ஆளாகி உள்ளார். பரோலுக்கு தகுதி பெற்றவுடன் நாடு கடத்தப்படுவார் என நீதிபதி டாம் கில்பர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தால் இவருக்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டி சில்வாவுக்கு ஏற்கனவே நாடுகடத்தல் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் பரோலுக்கு தகுதி பெற்றதும், இலங்கைக்கு விமானம் கிடைத்ததும் நாடு கடத்தப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *