http://ceylononline.lk/

Ceylon Online News Portal

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை

ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் 9 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதற்கமைய பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி வைபவரீதியாக முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கவிருப்பதுடன், அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

அன்றையதினம் காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை என்பன இடம்பெறும். இதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.

பாராளுமன்ற அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி வருகைதரும் போது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள். அதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றி வைக்கப்படும்.

படைக்கல சேவிதர், பிரதிப் படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர், சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *