http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு! நியமனக் கடிதம் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு, பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (16) ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வௌியிடப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமக்கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி தனக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர், பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வினவ முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *