மலையகத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தினை உருவாக்குவேன். ராஜங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
தோட்ட மக்களுக்கு ஏனைய மக்களுக்கு வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன் என ராஜங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று (14) திகதி கடமையேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த வேளையில் ஜனாதிக்கும் பிரமருக்கும் நன்றி கூற வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஆகவே இந்த அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கு ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன் இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமைபட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன்,தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
