குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வியாபார நிலையம் தீக்கிரை
குருணாகல் மாவட்டம், கட்டுபொத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுபொத்தை நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான சில்லறை வியாபார நிலையம் தீக்கிரையாகியுள்ளது. நேற்று அதிகாலை இந்த வர்த்தக நிலையத்தில் தீ பரவுவதை அவதானித்தவர்கள் பொலிஸார் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி முற்றாக கடை சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் இந்த தீ பரவரல் விபத்தா அல்லது நாசகார செயலா என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
