அங்கொட லொக்காவின் அடையாளத்தை உறுதிப்படுத்த மரபணு மாதிரி இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு
இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் ஜூலை மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்த இலங்கையின் பாதாளக் குழுத் தலைவரான அங்கொட லொக்காவின் பெற்றோரது மரபணு மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அங்கொட லொக்காவின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவரது பெற்றொரின் மரபணு மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அங்கொட லொக்காவின் தந்தையான மத்துமகே லயனல் பெரேரா மற்றும் தாயாரான சந்திரிக்கா பெரேரா ஆகியோரது மரபணு மாதிரிகளைப் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதேவேளை, அங்கொட லொக்காவின் மரண வழக்கில் இந்தியாவில் கைதான மூவரையும் மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கோயம்புத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

