இலங்கையின் தேசியக்கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கியது தொடர்பாக நடவடிக்கை – கண்டி ஆணையாளர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் கண்டி ஶ்ரீதலதா மாளிகை வளாகத்திலுள்ள, மகுல் மடுவ மண்டபத்தில் பதவிப்பிரமாண நிகழ்வில் கண்டி மாநகரத்தின் பல பகுதிகளிலும் மாநகரசபை ஊழியர்கள் தேசியக்கொடியில் சிறுபான்மையினரான தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட, கொடிகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
பின்னர் ‘தனி சிங்கக்கொடி’ காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதோடு அது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியதால் அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கண்டி மாநகரசபையின் ஆணையாளர் சந்தன தென்னகோன் தெரிவித்திருக்கிறார்.

