http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன்: நாமல் ராஜபக்ஷ

2020 பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டு 166,660 வாக்குகளை பெற்றுக்கொண்டார். இந்நிலையில், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது,

அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன், எனது நாட்டுக்கு என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *