டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம்
டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 32,146 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றிருந்தார்.
இன்று கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இவர் கடந்த இடைக்கால அரசாங்கத்திலும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
