சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீர் மரணம்
இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வட கடல் பகுதிக்குள் வந்த ஈழ அகதிகள் 4 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் என்பவர், நோய் வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமா என்ற அச்சத்தில் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

