இடைநிறுத்தப்பட்டிருந்த சேவை மீள ஆரம்பம்
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களை தாயகம் அழைத்துவரும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இதன்படி, இன்றைய தினம் இந்தியாவில் இருந்து 185 பேரும், மாலைத்தீவில் 187 பேரும் மற்றும் தோஹா கட்டாரில் இருந்து 17 இலங்கையர்களும் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
