http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து தமிழ் முஸ்லிம் மக்கள் செயல்படுவது மிகவும் அவசியம்: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் இம்முறை தமிழர்கள் தவிர்த்த சிங்கள கட்சிகளுக்கும், அரசாங்க சார்பு  தமிழ்கட்சிகளுக்கும் வாக்களித்து இருப்பது 70 ஆண்டுகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலைத் தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை மக்கள் தேர்தலில் வாக்களித்த முறையிலிருந்து நன்றாக தெரிந்து கொள்ளலாம் . எதிர்காலத்தில் இவற்றிற்கு இடம் கொடுக்காமல் தமிழ் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டு ஒருகிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்வது  மிகவும் அவசியம் என தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 மேலும் அவர் தெரிவிக்கையில்,

 தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆசனங்களுக்காக இடம்பெற்றுள்ள சில அவலட்சணமான செயற்பாடுகள் கூட்டமைப்பின் எதிர்காலப் பாதையைக் கட்டியம் கூறி நிற்பதாக வேதனையை வெளிப்படுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *