http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சம்பிரதாய அரசியலிலிருந்து விடுபட்டு ஜனநாயக விரோத செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து கட்சிகளிடமும் பெப்ரல் அமைப்பு கோரிக்கை

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை தேசியப்பட்டியலின் ஊடாக தெரிவு செய்வது என்பது மக்கள் ஆணைக்கு விரோதமான செயல்.

இந்த ஜனநாயக விரோத செயலுக்கு காலம் காலமாக இலங்கை அரசியலில் இடம் உண்டு. இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அனைத்து கட்சிகளிடமும்  பெப்ரல் அமைப்பு கோரிக்கை  வைத்துள்ளது.

மக்கள் ஆணை கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களுக்கு மத்தியில் மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருவது என்பது மக்கள் ஆணைக்கு விரோதமானது எனவே அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்  விதமான நபர்களை  தேசியப் பட்டியலின் ஊடாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *