http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வரலாறு காணாத வெற்றியை நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவிப்பு(வீடியோ இணைப்பு)


நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுபெரமுன வரலாறுகாணாத வெற்றியினை பெற்றுள்ளது.நாங்கள் அந்த அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களுக்கு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கினோமோ அவை அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

அதேநேரம் எமது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவும் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவும் முழுமூச்சாக செயற்படுவோம்.இந்த தேர்தலில் எமது கோரிக்கையினை ஏற்று வாக்களித்த அனைத்து இனமக்களுக்கும் இந்தவேளையிலே நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது வெற்றியினைத்தொடர்ந்து பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *