நுவரெலியாவில் மொட்டு மலர்ந்தது ஐ.தே.க வாடியது.
ஜக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருந்த நுவரெலியா மாவட்டத்தில் நடந்து முடிந்து பொதுத்தேர்தலில் மொட்டு மலர்ந்து ஐக்கிய தேசிய கட்சி வாடிப்போயுள்ளது.
இம்முறை பொதுத்தேர்தலில் நுவரெலியாவில் எட்டு உறுப்பினர்களை செய்து பாராளுமன்றம்; அனுப்புவதற்காக 12 அரசியல் கட்சிகளும்,13 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிட்டன.இதில் பிரபல கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி பொது பெரமுன ஆகியன போட்டியிட்டன.
பொது பெரமுன கட்சிக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி,ஆகிய இரு கட்சிகளும்,ஐக்கிய மக்கள் சக்திக்குள் தொழிலாளர் தேசிய சங்கம்,மலையக மக்கள் முன்னணி,ஆகியன போட்டியிட்டன. எனினும் பிரபல கட்சியான ஸ்ரீ சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இந்த தேர்தலில் எவ்வித ஆசனத்தினையும் பெறவில்லை.

இதில் இலங்கை தோழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஐந்து பேர் போட்டியிட்டு 02 பேர் தெரிவாகியுள்ளனர்,பொது பெரமுன சார்பில் போட்டியிட்ட மூன்று பேரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தொழிலாளர் தேசிய சங்கத்திலிருந்து இருவரும் மலையக மக்கள் முன்னணியிலிருந்து ஒருவருமாக 03 தெரிவாகியுள்ளனர்.
இந்த தேர்தலில் அதி கூடிய 109, 155 வாக்குகளை பெற்று ஜீவன் தொண்டமான் முதலாவதாக தெரிவாகியுள்ளதுடன் பொது பெரமுன சார்பாக போட்டியிட்ட சி.பி ரத்தநாயக்க,70, 871,வாக்குகளையும்,எஸ்பி;. திசாநாயக்க, 66,045 வாக்குகளையும், மருதபாண்டி ரமேஸ்வரன் 57902 வாக்குகளையும்,நிமல் பியதிஸ்ஸ 51,225 பெற்று தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்.83,392 வாக்குகளை பெற்று இம்மாவட்டத்தின் இரண்டாவதாக தெரிவு செய்ப்பட்டுள்ளார்.மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் 72,167 மயில்வாகனம்; உதயகுமார்.68,1119 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளனர்.
குறித்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மகாண சபை உறுப்பினர்களான பி.சத்திவேல்,பிலிப்குமார்,கணபதி கணகராஜ்,எஸ் .சதாசிவம்,ஆகியோர் தோழ்வியடைந்துள்ளனர்.மலையக மக்கள் யானைக்கு மாத்திரம் வாக்களிப்பவர்கள் என்ற எண்ணம் இம்முறை தேர்தலில் தவிடு பொடியாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்;கது.
