வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் நிலையங்களின் உற்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுவின் பணிப்பாளர் அசோக்க தர்தவன்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
விசேட பாதுகாப்பு சோதனை நிலையங்களும் வாக்கு எண்ணும் நிலையங்கள் இருக்கும் வீதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்கள் தொடர்பிலும் தகவல்களை சேகரிப்பர். இந்த செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொலிஸாரும் ஈடுபடுவர்.
வாக்குகணக்கெடுப்பு நிலையங்கள் 64 கிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்கு எண்ணும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதுடன் , வாக்கு எண்ணும் நிலையங்களின் உட்புற பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக இரு நிலையத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் உட்பட 52 பேர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன். அதற்கமைய வாக்கு எண்ணும் நிலையங்களின் உட்புற பாதுகாப்புக்கு மாத்திரம் 3328 பேர் பணியில் ஈடுபடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளிபுற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி உட்பட 735 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வாக்கு எண்ணும் நிலையம் ஒன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வெளிப்புற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை உள்ளடக்கிய 3069 நடமாடும் சேவைகளும் , 153 களக்கம் அடக்கும் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 1263 உத்தியோகஸ்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போதும் அதற்கு பின்னரும் நாட்டின் அமைதியை பாதுகாப்பதற்காக தொடர்ந்தும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அதற்கான ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
