நாட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து திரும்பிய ஒருவரும்(1),
சேனபுர நிலையத்திலிருந்த ஒருவரும்(1),
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவரும்(2)
இன்று தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,838 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் 2,537 பேர் குணமடைந்துள்ளதுடன், 290 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
