நாடளாவிய ரீதியில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
