வாக்களிப்பதை நிழற்படம் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுதல் சட்டமீறல்; மஹிந்த தேஷப்பிரிய
வாக்களிப்பதை நிழற்படமெடுத்தல் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுதல் தேர்தல் சட்டமீறல் எனவும் அறிக்கையினூடாக மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறு சமூகவலைத்தள பாவனையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
