http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சூட்சகமான முறையில் களஞ்சியபடுத்தப்பட்டு, விற்பனைக்காக மதுபான போத்தல்களை வைத்திருந்த நபரொருவர் கைது

தேர்தல் காலத்தில் 2 நாள் மதுபான சாலைகள் அரசால் மூடப்பட்டதை தொடர்ந்தே அதிக விலைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக பெருந்தொகையான மதுபான போத்தல்களை
வைத்திருந்ததாக நபரொருவர் போதை பொருள் ஒழிப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் இல்லம் ஒன்றில் சூட்சகமான முறையில் அனுமதி பத்திரமின்றி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகவிலையில் விற்பனை செய்வதற்காக களஞ்சியபடுத்தப்பட்டு இருந்ததாக பொலிஸ் அதிகாரி கூறினார்.

சந்தேக நபரிடம் இருந்த உள்நாட்டு தயாரிப்பு மதுபான போத்தல்கள் 25 கைப்பற்றப்பட்டுள்ளது என சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *