தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 10,000 இற்கும் அதிகமான அதிகாரிகள்
பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 10,000 இற்கும் அதிகமான அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
அமைதிக் காலப்பகுதியில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலான 2 முறைப்பாடுகள் அடங்குவதாகவும் Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
