http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பொது பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இம்முறை அரசாங்கத்தை அமைக்கும். வாக்களிப்பின் பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இ.தொ.காவின் நிதிச்செயலாளருமான ரமேஸ்வரன் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு )


நடைபெற்று வருகின்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன இம்முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் என நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் இ.தொ.காவின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று 05.08.2020 காலை வட்டகொட மெதகும்புர தமிழ் வித்தியாலயத்தின் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்;தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் இந்த நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்கிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களும் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.அவருடைய காலத்திலேயே மலையகத்தில் காபட் வீதிகள் , தொழில்வாய்ப்புக்கள் , ஏனைய அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றுள்ளன.எனவே இம்முறை மக்கள் பொதுபெரமுன அரசாங்கத்தை நுவரெலியா மாவட்டத்தில் அமோகமாக வெற்றிபெறச்செய்வதற்கு ஆயத்தமாக உள்ளார்கள்.இந்த பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவு வெற்றியினைப்பெறும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்;.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *