http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நீடிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்களிப்பு நேரம்

நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இடம்பெறுகின்றனர்.
வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

2019 வாக்காளர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த அனைத்து தேர்தல் காலங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது ஆனால் வைரஸ் தொற்றின் காரணமாக கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதால் இம்முறை ஒரு மணித்தியாலம் கூடுதலான வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது இதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *