http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் 10 பேர் இடை நிறுத்தம்

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதான தேர்தல் வாக்கெடுப்பு நிலைய அதிகாரிகள் 10 பேர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட செயலாளருமான ரோகன புஸ்பகுமார கூறினார்.
ரோகன புஸ்பகுமார அவர்கள் மேலும் கூறுகையில் இந்த பணிக்கு தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகள் 10 பேரும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் அதிகளவில் கலந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு செல்வது தடையாகும் என மாவட்ட செயலாளர் கூறினார். இந்த 10 பேருக்காக வேறு புதியவர்கள் நியமிக்கபட்டுள்ளனர் என பத்திரிக்கையாளர்களுக்கு மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார தெரிவித்தார்.

மேற்கொண்ட 10 பேரும் அரசியல் சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டமைக்கான சாட்சிகள் உள்ளதாகவும் அதற்கு அத்தாட்சியான படங்கள் உள்ளது எனவும் கூறினார். அவர்கள் யாவரும் வாக்களிப்பு நிலையங்களில் சேவைகளில் ஈடுபடுத்தவிருந்த ஆசிரியர்களாவர்.

பொது தேர்தல் 2020.08.05ம் திகதி நடைபெறவிருக்க உள்ளதில் வாக்களிப்பு நிலையங்கள்(498) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் கடமைக்காக 4100 பேர் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளர். மேலும் சுகாதாரப் பிரிவும் வாக்கு எண்ணவும் 2000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என ரோகன புஸ்பகுமார தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *