நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,828 ஆக அதிகரித்துள்ளது
இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய நால்வருக்கும், கந்தக்காடு தொற்றாளருடன் தொடர்பை பேணிய ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,828 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,517 பேர் குணமடைந்துள்ளதோடு , 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.
