http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அதிகமான இறப்பு சான்றிதழ்களில் கையெழுத்திட்ட மருத்துவரின் மனவேதனை.

அமெரிக்கா, ஹூஸ்டனின் யுனைடெட் மெமோரியல் மெடிக்கல் சென்டரில் கொரோனா வைரஸ் பிரிவை  வழிநடத்தி செல்லும் மருத்துவர் ஜோசப் வரோன் தொடர்ச்சியான 134 வது நாளாக விடுமுறை இல்லாமல், ஓய்வின்றி தனது கடமையை தொடர்கின்றார் . 

அமெரிக்காவின்  ஹூஸ்டனின் தற்போதைய நிலைமையை விவரிக்கும்போது இந்த மருத்துவர்   தனது மருத்துவ தொழிலில்  தான் கண்ட மிக மோசமான தருணம் இதுவாகும். கடந்த வாரம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கையானது மிக விரைவாக அதிகரித்த காரணத்தினால் தான் அதிகமாக இறப்பு சான்றிதழில் கையெழுத்து  இட வேண்டிய  துக்ககரமான  நிலையை அடைந்ததாக வேதனையுடன் பகிர்கிறார்.

 எங்கள் மருத்துவ குழு  உண்மையில் நோயாளிகளைப் பற்றி அறிந்துகொள்ள அதிக நேரம் எடுக்க முயற்சிக்கிறார்கள், ஏனெனில் உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடப்பட்டிருக்கும் PPE  போன்ற மருத்துவ உபகரணங்களால்  மருத்துவர்கள் நோயாளியிடம் அவர்கள் பற்றிய விபரங்களை எடுப்பதற்கும் மருத்துவர்கள் பற்றி நோயாளர்கள் அறிந்து கொள்வதற்கும் மிகுந்த சிரமப்படுவதாவும்  இதனால் குறைந்தபட்சமாக முகத்தையாவது தெரிந்து கொள்வதற்கும் அவர்கள் தங்களின் அச்சிடப்பட்ட புகைப்படங்களை தங்கள் பிபிஇ மீது அணிந்துகொள்வார்கள் இதனால் நோயாளிகள் குறைந்தபட்சம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம், மேலும் அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்ற யோசனையும் இருக்க முடியும் என்று மருத்துவர் ஜோசப் வரோன்  கூறினார்.

எங்கும் அதிகமான அவசர சிகிச்சை பிரிவு வாகனங்களின் சத்தத்திலும், இரவு 11.30மணி வரை  மக்கள் பரிசோதனைக்காக வரிசையில் நிற்பதை காணுகின்ற போது அமெரிக்காவின் குழப்பகரமான நிலை இது  என்று  வேதனையுடன் பகிர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *