http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி 14000 குடும்பங்களுக்கு தெளிவூட்டல்;(வீடியோ இணைப்பு)

மலையக பெருந்தோட்ட மக்கள் விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தமக்குள்ள உரிமைகள் பற்றியும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினையும்இகொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக சுமார் 14000 குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.

நேற்று இது தொடர்பாக தமது அமைப்பின் பிராந்திய அமைப்பாளர்களைத் தெளிவுப் படுத்தும் செயலமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். பிரிடோ நிறுவனம் பெருந்தோட்ட பகுதியில் பல்வேறுவிதமான செயப்பாடுளை முன்னெடுத்து வருகிறது.இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள ஏனைய பிரச்சினைகள் காரணமாகவும் வாக்களித்து தமக்கு எதுவும் கிடைக்காதது காரணமாகவும் பொது மக்கள் இன்று வாக்களிப்பதில் அக்கறை செலுத்தாது இருக்கின்றனர். இன்னும் சிலர் தாங்கள் அளித்த வாக்கினால் தங்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.


அவர்களை வாக்களிக்கத் தூண்டும் முகமாக எமது அமைப்பில் பணிபுரியும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் 200 பேர் வீடு வீடாகச் சென்று இவர்களைத் தெளிவு படு;த்திவருகின்றனர்.இந்த நடவடிக்கையின் மூலம் 14000 குடும்பங்களுக்கு நேரடியாக வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகிறோம்.
அதே நேரம் கொரோனா தொற்று பரவாமல் வாக்களிப்பது தொடர்பாகவும் துண்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.இதன் மூலம் 45000 வாக்காளர்களுக்கு இந்த செய்தி செல்லும் அதே நேரம் இந்த செயற்பாட்டின் ஊடாக பலர் வாக்குகளைப் பதிவு செய்யவில்லை. என்பதனையும் நாங்கள் அறிந்துகொண்டுள்ளோம் எனவே எதிர்காலத்தில் இந்த நிலைமையினையும்; போக்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *