லங்காபுர பிரதேசத்தில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள கொரோனா நோயாளி பற்றிய தகவல்
லங்காபுர பிரதேசத்தில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர் லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவையாற்றிய அலுவலக உதவியாளர் ஆவார்.
கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் கண்டறியப்பட்ட நோயாளியுடன் இந்த நபர் நேரடி தொடர்பு பேணி இருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
கொரோனா நோயாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை அந்நபர் பேணியதாகக் கூறப்பட்டுள்ளது.
60 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையின் போது குறித்த கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பாலத்த பண்டார கூறினார்.
இந்த நோயாளியுடன் நேரடி தொடர்பு பேணி வந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அரச வங்கி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
