பிறந்த தினத்திற்கு பாடசாலைக்கு நீர் பெற்றுக்கொடுத்த நபரை இந்த சமூகம் முன் உதாரணமாக கொள்ள வேண்டும். ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
பிறந்த நாள் என்றால் சிலர் ஆடல் பாடல் கூத்து கொண்டாட்டம் என நேரத்தையும் காலத்தையும் வீணாக்குவார்கள்.அதில் பணத்தையும் செலவு செய்வார்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அட்டன் கல்வி வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளான மஸ்கெலியர் கவரவில தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் முருகானந்தன் பிரகாஷ்பாலனின் நினைவு தினத்திற்காக அவரது மனைவி நவமலர் பிரகாஷ்பாலன் பிறந்ததினமான இன்று அவர் ஒரு பாடசாலைக்கு தலா ஏழு லட்சம் வீதம். இரு பாடசாலைக்கும் 14 இலட்சம் ரூபா செலவு செய்து குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த இரண்டு திட்டங்களின் மூலம் ஆயிரங்கணக்கான மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு மற்றும் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.இதனால் இப்பாடசாலையில் நீண்டகாலம் நிலவிவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொருவரும் சிந்தித்தால் மலையகக்கல்வியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
e size-medium wp-image-3234″ />அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கலியா கவரவில் தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று 29.07.2020 அட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;க்கையில் ஹட்டன் கல்வி வலயத்தில் இந்த குடிநீர் பிரச்சினைகள் நிலவும் பாடசாலைகள் தொடர்பாக பலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் அவற்றிக்கு தீர்வுகிட்டவில்லை இன்று ஐ.எம் .எச் ஓ. நிறுவனத்தினுடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதையிட்டு இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி கூறுவதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் கோட்டம் மூன்றில் அதிகஷ்டப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்காக லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் உதவிக்கோட்ட காரியாலயம் ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது.இந்த காரியலயத்தை திறந்து வைப்பதன் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு தேவையான சகல ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்த செய்யவேண்டும் எனவும் அவர் இதன் போது கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வுக்கு ஐ.எம்.எச்.ஓ நிறுவனத்தின் முகாமையாளர் கந்தையா விக்ணேஸவரன் கோட்டக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் இ ஆசிரிய ஆலோசகர்கள்இ அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
