யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கொரோனா தொற்று
கடந்த 7ம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 208 பேருடன் தங்கியிருந்த , நபர் ஒருவர் 22ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் தனிமைப்படுத்தல் நிலையம் திரும்பிய அவர் இரண்டாம் முறையாக கடந்த 25ம் திகதியும் அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தார்.
தற்பொழுது மேற்கூறிய சந்தேக நபருக்கு பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது இதை உறுதிப்படுத்தினார்.
இதன்போது அவா் கூறுகையில்,
அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்களுக்கான பரிசோதனைகள் எதிா்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது எனவும் மேலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் பாதுகாப்பு அங்கிகள், முக கவசங்கள் பயன்படுத்தப்பட்டே குறித்த நபா் பரிசோதிக்கப்பட்டுள்ளாா். இதேபோல் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வந்தவா் என்ற அடிப்படையில் கையுறை, முக கவசம் அணிந்துள்ளதுடன், சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனா். ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவா்களுக்கோ, ஊழியா்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேகம் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம் என்றாா்.

