பாதிப்பு எண்ணிக்கையில் மிக வேகமாக செல்லும் இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,15,472 பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது . இதையடுத்து தொற்று இனங்காணபட்டவர்களின் எண்ணிக்கை 14,30,000 தாண்டியுள்ளது.
‘புளூம்பெர்க்’ நிறுவனம் உலகிலேயே தொற்று மிகவேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியா என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளது

