ஒரு லட்சத்து 50 ஆயிரம் உயிர்ப்பலியை கடந்த அமெரிக்கா
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது. உலக அளவில் பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
புதிய தகவலின்படி 44 லட்சம் அமெரிக்கர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது , இதில் 21லட்சம் அமெரிக்கர்கள் சிகிச்சை குணமடைந்த குணம் வீடு திரும்பிய போதிலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபரின் ஆரம்பகட்ட தடுப்பு நடவடிக்கைகளின் அலட்சியத்தால் உலகிலேயே தலைசிறந்த நாடாக மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்கா இன்று நிலைகுலைந்து இருக்கின்றது.

