http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஆலமரம் வீழ்ந்த தொடர் குடியிருப்பில் ஆபத்தான நிலையில் வாழும் 18 குடும்பங்கள்.(வீடியோ இணைப்பு)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மிகவும் அருகாமையில் உள்ள கிளஙகன் தோட்டத்தில் ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்த தொடர் குடியிருப்பு சேதமடைந்த நிலையில் கடந்த நான்கு வருட காலமாக மிகவும் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


2016 .04 18 ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த தோட்டத்தில் 100 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த பாரிய ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்தன. இதனால் 24 வீடுகளைக் கொண்ட குறித்த தொடர் குடியிருப்பில் இரண்டு வீடுகளும் ஒரு ஆலயமும் முற்றாகச் சேதமடைந்தன. இந்நிலையில் ஒரு குடும்பம் அத்தோட்டத்தில் உள்ள சிறுவர் பாராமறிப்பு நிலையத்திலும் ஏனைய குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலும் ஏனைய 18 குடும்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தொடர் குடியிருப்பிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த தொடர் குடியிருப்பு பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் அத்திவாரம் சேதமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானால் இடிந்து வீழும் நிலையிலேயே இவர்கள் வாழ்ந்து வருவதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள எட்டடி காம்பாராக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஐந்து பேர் வாழ்கின்றனர்.இதில் க.பொ.த.சாதாரண தரம் க.பொ.டர் முகாமைத்துவ நிலையத்தினால் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும்.அதன் பின் அவர்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.


தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து வாக்கு கேட்கும் மலையக அரசியல் தலைவர்கள் தாங்கள் படும் துன்பங்களை அவதானித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காதிருப்பதேன் ஏன்? என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எது எவ்வாறான போதிலும் தொடர்ந்து இவர்களுக்கு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து தங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்றும் இந்த வீடுகள் இடிந்து வீழ்ந்த மக்கள் மடிவதற்கு முன் பாதுகாப்பான வீடுகளை அமைத்துத் தருமாறு இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *