http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பென்தரா பாதூஸ் இன புலி ஒன்று வலையில் சிக்கி இறந்துள்ளது

பென்தரா பாதூஸ் இன புலி ஒன்று மீண்டும் வலையில் சிக்கிஇறந்துள்ளது என நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரி பிரகாஸ் கருணாதிலக்க கூறினார்.
இவ்வாறு வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் புலி ஒன்றை நாவலபிட்டிய மாபகந்த பிரதேசத்தில் கோப்பி மரத்தில் கட்டப்பட்ட வலையில் சிக்கிய நிலையில் இருந்ததாக பிரகாஸ் கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.


மாபகந்த பிரதேசத்தில் விவசாய காணியில் வனவிலங்கு வேட்டையாடுவதால் அந்த வேட்டையின் போது போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்குண்ட புலி அதனை உடைத்துக்கொண்டு வெளியேற முயற்சித்த போது கோப்பி மரத்தில் சிக்கி மரணித்துள்ளது.
இது விடயமாக அப்பிரதேச மக்கள் கோப்பி மரத்தில் சிக்குண்ட புலி ஒன்று உள்ளதாக நல்லதண்ணி வனபாதுகாப்பு துறையினருக்கு அறிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கோப்பி மரத்தில் வலையில் சிக்கிய நிலையில் உயிரிழந்த புலியின் உடலை மீட்டு பார்த்தபோது 7 வயதுடைய புலியாகும் எனவும் 7 அடி நீளம் 3 1ஃ2 அடி உயரம் கொண்டது என கூறினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *