பொல்பிட்டிய சமனல நீர்மின் உற்பத்திநிலையததிற்கு சமீபமாக பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆணின் சடலம் பொல்பிட்டிய சமலன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் குறித்த சடலம் இன்று (26) காலை 7.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதியில் சடலம் கிடப்பதனை கண்டு பொது மகன் ஒருவர் வழங்கிய தகவலினையடுத்தே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலத்திற்கு அருகில் தலைக்கவசம் ஒன்று கிடப்பதாகவும் எனினும் மோட்டார் சைக்கில் எதுவும் இது வரை கண்டுபிடிக்கவில்லை.
குறித்த நபர் கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்துள்ளாரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகி;ன்றனர்.
