1600 தன்னார்வலர்கள் உடனடியாக தேவை; நம்பிக்கையளிக்கும் தடுப்பூசி சோதனை
இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தடுப்பூசியின் 2-வது, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காக 18 வயதான 1600 பேருக்கு ஆய்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) அனுமதி கோரப்பட்டுள்ள்ளதாக தெரிவித்தார்.
‘கோவிட் ஷீல்டு’ என்று இந்தியாவில் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட், இந்திய மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றது. மிக வேகமாக கொரோனா உயர்ந்து செல்லும் இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பு இந்த தடுப்பூசி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
ஜென்னர் இன்ஸ்டிடியூட், இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு புனேவை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

