http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தொலைகாட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது.

தொலைகாட்சி நிகழ்வுகளில் கலந்து ரியலிட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட பல சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து கொள்ளுபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொலைகாட்சி மேடைகள் வடிவமைப்பாளர் என்று இவர் நீண்ட காலமாக குறித்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், குறித்த தவறான செய்திகளை கானொளியாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *