கொவிட் 19 தொற்று நோய்க்குள்ளாகி 2103 பேர் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோய்க்கு 2770 பேர் இது வரை உள்ளாகியிருப்பதாகவும் அதில் 2103 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தொற்று நோய் பரிவின் விசேட வைத்திய பணிப்பாளர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதே நேரம் கடந்த 25 திகதி இரவு வரை 1240 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது நாட்டில் 147385 பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
