அரசாங்கம் 19 ஐ யும்; 13 ஐயும் இல்லாது செய்வதற்குமே மூன்றிலிரண்டை கோருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
இன்று இருக்கின்ற அரசாங்கம் ஒரு இனத் துவேசமான அரசாங்கத்தினை கொண்டு செல்கிறது.பெசில் ராஜபக்ச கூறுகிறார். எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொடுங்கள் வடகிழக்குக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு என்று. 2010 ஆண்டு இருந்த 2015 வரைக்கும் யார் இந்த அரசாங்கத்தை ஆண்டது.இந்த காலப்பகுதியில் ராஜபக்ஸ அரசாங்கம் தான் ஆண்டது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இருந்தது.ஏன் அப்போது வடகிழக்கு மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.ஆனால் இப்போது கூறுகிறார்கள.; மூன்றிலிரண்டு பெரும்பான்மை தாருங்கள் நாங்கள் வடகிழக்க பிரச்சினையை தீர்க்கிறோம். என்று.இது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் ஒன்று மூன்றிலிரண்டு பெரும்பான்மை கேட்பது வேறு ஒன்றுக்குமல்ல 19 வது திருத்த சட்டத்தினையும் 13 திருத்த சட்டத்தினையும் நிக்குவதற்கே தவிர வேறு ஒன்றுக்கும் அல்ல. என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரலியா மாவட்ட வேட்பாளர் வே .இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இன்று (25) அக்கரபத்தனை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்… நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் மொட்டுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானது என்று. இதனை நிதர்சனமாக புரிந்து கொள்ள வேண்டும். மாறாக தொலைபேசிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாக்குகளாக இருக்கின்றது. என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று இந்த அரசாங்கத்தில் ஒரு டசின் ராஜபக்ஸமார்கள் இருக்கிறார்கள். இந்த கோட்டபாய ராஜபக்ஸ, சமல்ராஜபக்ஸ, பெசில்ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ என அடுக்கிக்கொண்டே போகலாம்.இவ்வாறு குடும்ப ஆட்சிக்கு வாக்களிக்க போகிறீர்களா? அல்லது ஜனநாயக ஆட்சிக்கு வாக்களிக்க போகிறீர்களா?என்று சிந்திக்க வேண்டும்.ஏனென்றால் ஒரு குடும்பம் குசினியில் வைத்து இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடாது.ஜனநாயக படி தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக படி தீர்மானிக்க வேண்டும். என்றால் நீங்கள் சஜித்பிரேமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும்.சஜித்பிரேமதாச ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் வறியவர்களின் கஸ்ட்டம் அவர்களுக்கு நன்கு புரிகிறது அதே போன்று தோட்டத்தில் பிறந்ததனால் தான் தோட்ட மக்களின் கஸ்ட்டம் எங்களுக்கு தெரிகிறது.நான் மாளிகையில் பிறந்திருந்தால் எனக்கு தோட்ட மக்களின் கஸ்ட்டங்கள் தெரியாது. அன்று 1988 ஆண்டு எமக்கு வாக்குரிமையினை பெற்றுக்கொடுத்ததும் ரணசிங்க பிரேமதாசதான் ஆகவே அந்த நன்றியினை நாம் மறந்து விடக்கூடாது.அதே நேரம் இந்த தோட்டத்திற்கு நானும் திகாம்பரம் அவர்களும் பல வேலைகளை செய்து கொத்திருக்கிறோம் தொடர்ந்தும் எமது சேவைகளை முன்னெடுப்பதற்கே நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்கிறோம்.இன்று பலர் செய்து தருவதாக கூறியே வாக்கு கேட்கிறார்கள் ஆகவே நீங்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
