http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகன்ற இருவர் பொலிசாரால் கைது

பொகவந்தலாவ கெசல்கமு ஓயா வனப்பகுதியான மோரா தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகன்ற இருவரை பொகவந்தலாவ பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை பொகவந்தலாவ பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் பொகவந்தலாவ பொலிசார் அந்த வனப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது அங்கு சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 2 பேரையும் உபகரணங்களையும் கைப்பற்றினர்.
இவ்வாறு மாணிக்க கற்கள் அகன்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *