http://ceylononline.lk/

Ceylon Online News Portal

40 வருட அடிமை வாழ்க்ககையினை இல்லாதொழித்து இந்த சமூகத்து முகவரிக்கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான். நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பாளர் பி.சத்திவேல் தெரிவிப்பு. (வீடியோ இணைப்பு)

40 வருட காலமாக இந்த நாட்டின் அடிமைகளாகவே எம்மை நடத்தப்பட்டன.சிறிமா சாத்திர ஒப்பந்தம் மூலம் 5 லட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.அப்போது எம்மை நாடற்றவர்கள் கள்ளத்தோனி,என்று பல பட்டங்கள் சூட்டப்பட்டன.அவ்வாறான ஒரு நிலையில் மறைந்த தலைவர்கள் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் எமக்கு வாக்குரிமையினை பெற்றுக்கொடுத்து கல்வியினை பெற்றுக்கொடுத்து இந்த சமூகத்திற்கு முகவரியை கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பாளர் பி.சத்திவேல் தெரிவித்தார்.
அக்கரபத்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; இன்று ஒரு வீட்டை தட்டினால் ஒரு ஆசிரியர் வருவார்,வைத்தியர்வருவார்.ஒரு சட்டத்தரணி வருவார் பலர் இன்று பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் தொழிநுட்பம் வளர்ந்துள்ளது. இந்த அளவுக்கு எமது சமூகத்தை உயர்த்தியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பே.கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிக்கவில்லையோ 15 லட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றுவிட்டார்.காங்கிரஸ் உங்களுக்கு வழிகாட்டியது ஆனால் சிறுபான்மை மக்கள் தவறிவிட்டார்கள்.ஆனால் இன்று நிலமை அப்படியல்ல. இன்று தமிழ் முஸ்லிம் அனைத்து மக்களும் மொட்டு சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்,ஜனாதிபதியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கொரோனா நோய் வந்த போது அதனை மலையகத்திற்கு பரவாமல் தடுத்து நிறுத்தியவர் இந்த ஜனாதிபதி,அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருக்கிறார.; க.பொ.சாதாரண தர த்தில் சித்தி பெறாத ஒரு லட்சம் பேருக்கு அரச துறையில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளார். காரணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அரச ஊழியர் இருக்க வேண்டும் என்று.ஆகவே இந்த அரசாங்தின் மூலம் பல நன்மைகள் எமது மக்களுக்கு கிடைக்கவுள்ளன ஆகவே மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கணவினை நிறைவேற்றுவதற்கு ஜீவன் தொண்டமானை அவரது அமைச்சில் அமரச் செய்து இந்த சமூகத்திற்கு சிந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *