மகப் பேறு இல்லாததால் அரசியல் ஆளுமை குறையுமா? மங்கள சமரவீர கேள்வி
சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர், சஜித் பிரேமதாஸவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தது பெண்கள் மனதில் உளைச்சலை உருவாக்கியுள்ளது.
மகப்பேறு சுதந்திரம் தம்பதியினரின் தனிப்பட்ட உரிமையாகும் இதை அரசியல் நாகரிகம் இல்லாமல் பொது மேடையில் விமர்சிப்பது பிரதமர் போன்ற ஒருவருக்கு அழகல்ல என்று ஹிருணிக்கா பிரேமச்சந்திர பிரதமர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் சிறிது நேரத்திற்கு முன் மங்கள சமரவீர இதுகுறித்து தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
Is Narendra Modi a lesser leader than MR for not having children? Looking at the quality and integrity of some of our political offsprings, shouldn’t being childless be considered a plus point for future political leaders???
— Mangala Samaraweera (@MangalaLK) July 24, 2020
மகப் பேறு இல்லாததால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட ஆளுமையில் குறைந்தவரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேலும் மகப்பேறு இல்லாதது சிறந்த தலைவர்களை உருவாக்கும் நேர்மையான கருத்தேயன்றி எதிர்மறையானது அல்ல என்று அவர் எழுப்பியிருக்கும் கேள்விக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளபடம் பதில் தருமா?

