பெருந்தோட்ட மக்களின் அரசியல் விவாதப் பொருளான அடிப்படை சம்பளம் 1000 ரூபாயிலிருந்து 1,500 ஆக உருமாற்றம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தில் இருந்து 1500 ரூபாய் உயர்த்தி தருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்
பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுக்கும் முன்னெடுக்கவிருக்கும் தங்களுடைய ஆட்சியில் பெருந்தோட்டத் துறை அமைச்சராக வடிவேலு சுரேசை தான் நியமிப்பபேன் என்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழிலாளர்களாக தாங்கள் வைத்திருக்க விரும்பவில்லை என்று அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறினார்.

