2021ம் ஆண்டு முதல் பகுதியிலேயே தடுப்பு மருந்து கிடைப்பதற்கானஅறிகுறிகள்
நோய் பரவலை கட்டுப்படுத்துவதுதான் தற்போதைக்கு சிறந்த தடுப்பு மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அடுத்த வருடம் 2021ம் ஆண்டு முதல் பகுதியிலேயே தடுப்பு மருந்து கிடைப்பதற்கானஅறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா நோய் பல லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் தடுப்பு மருந்து ஒன்று தான் சிறந்த வழி என்ற எண்ணத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் அதில் ஓரளவு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளார்கள்.
சீனா தன்னுடைய தடுப்பு மருந்து கடைசி கட்ட சோதனையில் இருப்பதாகவும், இந்தியா சீரம் இன்ஸ்டிடியூட் தன்னுடைய பங்குதாரர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மூலமாக தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து நவம்பரில் விற்பனைக்கு வரும் என்றும் உலக நாடுகள் அறிவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உலக சுகாதார நிறுவனத்தின் அமைப்பின் இந்த அறிவிப்பு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது

